News October 19, 2025
திருச்சி: 1000 போலீசார் பாதுகாப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள், கடை வீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்பு உள்ளது. இதனை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் மட்டும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மாவட்டத்தில் காவல் உதவி தேவைப்படும் மக்கள் 89391 46100 என்ற தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
திருச்சி: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு<
News December 15, 2025
திருச்சி: ஏர்பஸ் விமானம் இயக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு சேவைக்காக பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாளை முதல் (டிச.16) முதல் (டிச.31) வரை அதிக இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் விமானம், இண்டிகோ நிறுவனம் மூலம் இயக்க உள்ளது. இந்த சேவை பொதுமக்கள் பயணிக்கும் வகையில், இருக்குமா? என்பது அந்த விமானங்கள் இயக்கப்படும் போது தெரியவரும், இதனால் மற்ற சேவைகள் ரத்து.
News December 15, 2025
திருச்சி: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


