News October 13, 2025

திருச்சி: மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

image

கம்பரசம்பேட்டை அருகே மல்லாச்சிபுரத்தைச் சேர்ந்த தனபாக்கியம் (80) என்ற மூதாட்டி நேற்று மாலை, குடமுருட்டி பாலம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த லாரி மோதியதில் மூதாட்டி பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 10, 2025

திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News December 10, 2025

திருச்சி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி வரும் டிச.,12-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கையேடு, மதிய உணவு, சான்றிதழ்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0431-2962854,  9171717832 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

திருச்சி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!