News October 20, 2025
திருச்சி: மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

லால்குடி அடுத்த காட்டூரை சேர்ந்தவர் கதிரவன் (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெள்ளனூர் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று காலை புதூர் உத்தமனூர் அருகே உயர் மின் அழுத்த பாதையில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசிப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 6, 2025
திருச்சி: மரம் முறிந்து விழுந்து பெண் பரிதாப பலி

தொட்டியம், அரங்கூரில் நேற்று புளியமரம் விழுந்ததில் நிர்மலா என்பவர் உயிரிழந்தார். நிர்மலா மரத்தடியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த நிலையில், சாப்பாடு வாங்குவதற்கு நடந்து செல்லும் போது புளியமரம் சாய்ந்து நிர்மலா மீது விழுந்தது. இதில், மயக்கமடைந்து கீழே விழுந்தவரை அவரது கணவர் மகாமுனி அரசு மருத்துவமனை கொண்டு சேர்த்தார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News December 5, 2025
திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

திருச்சி மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தவலை SHARE பண்ணுங்க.!
News December 5, 2025
திருச்சி: BE /B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, Diploma
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க


