News November 14, 2025
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

வெளிநாட்டில் வேலை என ஆசை வார்த்தைகள் கூறும் போலி முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என திருச்சி காவல்துறை எச்சரித்துள்ளது. மேலும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் Protector of Emigrants (POE) வழங்கிய உரிம எண் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். மேலும், வெளிநாட்டு வேலை மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க 8939146100 என்ற எண்ணை அழைக்கலாம் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 16, 2025
திருச்சி: பைக், காருக்கு fine-அ? Cancel செய்வது ஈஸி!

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News December 16, 2025
திருச்சி – சென்னை ரயில் நேரம் மாற்றம்

திருச்சி – சென்னை சோழன் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் திருச்சிராப்பள்ளி – சென்னை எக்மோர் சோழன் விரைவு ரயிலானது நாளை (டிச.17) ஒரு நாள் மட்டும், ஒரு மணி நேரம் தாமதமாக நண்பகல் 12 மணிக்கு புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 16, 2025
திருச்சி: 4 நாட்களுக்கு ரயில் ரத்து!

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருச்சி – காரைக்கால் டெமு ரயில் வரும் 24, 26, 28, 31 ஆகிய தேதிகளில், காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.


