News April 8, 2024
திருச்சி: மாணவிகளுக்கு அவசியம்

திருச்சி ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்தது. தேசியக் கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். விழாவில் தென்னக ரயில்வே வணிக மேலாளர் மோகனப்பிரியா, மாணவ மாணவிகளுக்கு பன்முகத்திறமை, வளர்ச்சி மட்டுமே மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் அமைக்க உதவுகிறது என்று கூறினார். குழந்தைகளிடம் பாலின கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
Similar News
News December 9, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை!

திருச்சி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 9, 2025
திருச்சி: வாகன பொது ஏலம் அறிவிப்பு

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில், போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 25 டூவீலர்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் நாளை (டிச.10) காலை 10 மணிக்கு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் இன்று (டிச.9) மாலை 5 மணி வரை, மாநகர ஆயுதப்படை வளாகத்தில் வாகனங்களை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 9, 2025
திருச்சி: ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் நாளை (டிச.10) திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர், மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள், பார்க்கிங் மற்றும் பார்சல் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


