News August 6, 2024

திருச்சி மருத்துவருக்கு உயரிய விருது

image

தமிழ்நாட்டின் மருத்துவ துறையின் மிக உயரிய விருதாகிய தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் விருது – 2024 திருச்சியை சேர்ந்த சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ் ராஜேந்திரனுக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் இன்று விருது வழங்கப்பட்டது. சிறுநீரக அறுவை சிகிச்சை, சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கும் நுட்பவியல் துறையில் 17 ஆண்டுகளாக சிறந்த மருத்துவ சேவை அளித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

Similar News

News January 24, 2026

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக நாளை (ஜன.25) காலை 11:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 24, 2026

திருச்சி: பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதாட்டி

image

மணப்பாறை பேருந்து நிலையத்தில் தங்கி, சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக யாசகம் பெற்று வந்த சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூதாட்டி யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 24, 2026

தென்னக ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

image

குடியரசு தினம் முதல் சோழன் விரைவு வண்டி(Sl no: 104,105) திருவெறும்பூரில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக திருவெறும்பூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இந்தாண்டு நிறைவேறியுள்ளது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட திருச்சி எம் பி துரை வைகோவுக்கு திருச்சி மக்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!