News October 1, 2025

திருச்சி: மதுபோதையில் விபத்து- இளைஞர் பலி

image

மணப்பாறை அடுத்த கரும்புளிபட்டியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் நேற்று முன்தினம் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது பொத்தமேட்டுப்பட்டி மேம்பாலத்தின் நடுவே கட்டையில் மோதி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி GHக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் கொலை வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர் எனபது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 16, 2025

திருச்சி: ரயில் மோதி பரிதாப பலி

image

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 16, 2025

திருச்சி: குறைதீர் முகாமில் பெறப்பட்ட 412 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 412 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!