News August 22, 2025
திருச்சி: மக்களே உஷார்…! புதிய மோசடி

திருச்சி மக்களே உஷார்! வங்கியில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். இப்படியாக வரும் அழைப்புகள் மூலம் அதில், உங்களுடைய விவரங்கள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் பயன்படுத்தி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்று பலர் ஏற்கெனவே லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உடனடியாக இந்த 1930 எண்ணுக்கு அழைத்து புகாரளியுங்கள். இதனை SHARE பண்ணுங்க!
Similar News
News January 22, 2026
திருச்சி: கழிவுநீரில் சடலமாக கிடந்த ஆண்

மணப்பாறை அடுத்த விடத்திலாம்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார். கூலித்தொழிலாளியான இவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று முந்தினம் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 22, 2026
திருச்சி: மின்தடை அறிவிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை, தியாசேகர் ஆலை, விடத்திலாம் பட்டி, மற்றும் பன்னாங்கொம்பு ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.23) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக அங்கிருந்து மின்விநியோகம் பெறும் மணப்பாறை நகரம், வெள்ளக்கல், நொச்சிமேடு, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, முத்தப்புடையான்பட்டி, களத்துப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.!
News January 22, 2026
திருச்சி: மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பயண அட்டை

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பார்வை திறன் குறைபாடுடையவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக, இலவச பேருந்து பயண அட்டையினை விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


