News April 30, 2024

திருச்சி: பழிக்கு பழி.. 2 பேர் கைது!

image

திருச்சி,அரியமங்கலம் அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் மகன் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.பட்டப்பகலில் துப்பாக்கி, கத்தியுடன் வந்த மர்ம நபர்கள் முத்துக்குமாரை வெட்டி கொன்று தப்பித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக லோகநாதன், இளஞ்செழியன் இருவரையும் அரியமங்கலம் போலீசார் இன்று கைது செய்தனர். 2021ல் நடந்த சிலம்பரசன் கொலைக்கு பழிக்கு பழியாக தற்போது முத்துக்குமார் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 10, 2025

திருச்சி: காளான் வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

image

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி வரும் டிச.,12-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு கையேடு, மதிய உணவு, சான்றிதழ்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 0431-2962854,  9171717832 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

திருச்சி: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 10, 2025

திருச்சி: ரூ.50,000 பரிசு அறிவிப்பு!

image

நவல்பட்டு அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படும் 6-ம் ஆண்டு கபடி போட்டி வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ.20,000 என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள கபடி வீரர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!