News November 15, 2025
திருச்சி: பணம் பிரச்னையில் வாலிபர் அடித்து கொலை

மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி(38). தொழிலாளியான இவர், மாயமான நிலையில், மணப்பட்டி பாலத்திற்கு கீழ் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட தகறாரில் கருணாநிதியை தாக்கியதில், அவர் உயிரிழந்ததாகவும், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 5, 2025
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் பல்வேறு மோசடிகளில் சிக்கும் நிலையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்காமல் இருக்க வேலைவாய்ப்பு அல்லது முகவர்களின் உரிமத்தை emigrate.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்க கூறியுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளது.

News December 4, 2025
திருச்சி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு நடப்பு ஆண்டுக்கு (2025-26) தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மூடி முத்திரை இடப்பட்ட விலை மதிப்பீடுகள் (டெண்டர்) வரும் 10-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.