News August 6, 2024
திருச்சி சிறையில் விடுவிக்கப்பட்ட பிரபல யூடுபர்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த, ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து இன்று காலை நிபந்தனை பிணையின் பேரில் விடுவிக்கப்பட்டார். பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, அவர் நடத்தி வரும் ‘யூ டியூப்’ சேனலை மூடும்படி உத்திரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 20, 2026
கழிவுகளை ஆற்றில் கலந்துவிட்ட மாநகராட்சி ஊழியர்கள்

திருவெறும்பூர் அருகே திருநகரில் உய்யக்கொண்டான் ஆறு செல்கிறது. அங்கு பாதாள சாக்கடை கழிவுகளை நேரடியாக திருச்சி மாநகராட்சி ஊழியர்கள் கலந்துவிடும் கொடுமை நேற்று அரங்கேறியது. ஏரி, குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டிய அரசு ஊழியர்களே இதுபோன்று செயலை செய்தது, பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
News January 20, 2026
திருச்சி: பாஸ்ட் புட் தயாரிப்பு இலவச பயிற்சி

திருச்சி ஐஓபி வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் இணைந்து துரித உணவுகள் தயாரித்தல் குறித்து 12 நாள் இலவச பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்தது 8ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட 18-45 வயதுடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் ஜன.23ஆம் தேதி கடைசி தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.