News November 14, 2025

திருச்சி: சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு தல ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <>https://www.tn.gov.in/form view.php?dep id=MQ==<<>> என்ற இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, வரும் 28ம் தேதிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

திருச்சி அருகே சிக்கிய திருட்டு கும்பல்

image

முசிறி உழவர் சந்தை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த ராஜா (42), சுரேஷ் (42), சுப்ரமணி (48) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முசிறியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.

News December 17, 2025

திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!