News October 19, 2025
திருச்சி: கரண்ட் கட்டா? கவலை வேண்டாம்

திருச்சி மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
திருச்சி: ரயில் மோதி பரிதாப பலி

ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை சுமார் 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 16, 2025
திருச்சி: குறைதீர் முகாமில் பெறப்பட்ட 412 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 412 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.