News October 11, 2025
திருச்சி: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

திருச்சி மாவட்டத்தில் 72 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 12, 2025
திருச்சி: கடன் தொல்லையால் விபரீத முடிவு

செங்காட்டுப்பட்டி அடுத்துள்ள கீரம்பூர் காலனியில் வசிப்பவர் ராஜேந்திரன் இவர் தனது மனைவி இறந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று அருகே உள்ள தம்பு என்பவருடைய வயலில் இறந்த நிலையில் இருபதை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணையில் இவர் கடன் தொல்லையால் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து இவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
News December 12, 2025
திருச்சி: டிராக்டர் வாங்க மானியம் வேண்டுமா?

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க
News December 12, 2025
திருச்சியில் 15 % பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களில், திருச்சி மாவட்டத்திலிருந்து சுமார் 15 % பேர் இதுவரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 1609 பேர் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களில் 1175 பேர் பயிற்சியை முடித்து சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 186 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாக திறன் மேம்பாட்டு கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


