News October 11, 2025
திருச்சி: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்,கலெக்டர்!

இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 9 மற்றும் 11ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் தங்களது கைபேசி எண், ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து, பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் பல்வேறு மோசடிகளில் சிக்கும் நிலையில் திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை மோசடிகளில் சிக்காமல் இருக்க வேலைவாய்ப்பு அல்லது முகவர்களின் உரிமத்தை emigrate.gov.in என்ற இணையதளத்தில் சரிபார்க்க கூறியுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கூறியுள்ளது.

News December 4, 2025
திருச்சி: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட காவல்துறைக்கு நடப்பு ஆண்டுக்கு (2025-26) தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க தகுதி வாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மூடி முத்திரை இடப்பட்ட விலை மதிப்பீடுகள் (டெண்டர்) வரும் 10-ம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த மேலும் விரிவான விவரங்களுக்கு மாவட்ட எஸ்பி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.