News August 7, 2025
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் (ஆண், பெண்) ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி சமூக நல அலுவலரை (0431-2413796) அணுகவும். SHARE பண்ணுங்க!
Similar News
News November 14, 2025
திருச்சி: B.E போதும்.. இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.18 முதல் 23 வயது நிரம்பிய, +2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
திருச்சி: ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

திருச்சி, கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் நவ,27ம் தேதி ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் மற்றும் 28ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கட்டணத்துடன் கூடிய இந்த பயிற்சி முகாமில் ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்த விபரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


