News November 19, 2025
திருச்சி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
Similar News
News January 15, 2026
திருச்சி: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 15, 2026
திருச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘தெரியாத வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.! இது உங்கள் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு அல்லது ஹேக் செய்வதற்கு பொறியாக இருக்கலாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News January 15, 2026
திருச்சி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு.. APPLY NOW!

திருச்சி மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


