News September 30, 2025
திருச்சி: ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ராஜ்குமார் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலை நிமித்தமாக சிறையிலிருந்த ராஜ்குமாரை போலீசார் வெளியே அழைத்து சென்றபோது தப்பியோடிய நிலையில், கே.கே நகர் போலீசார் அவரை தேடி வருகின்றனர். கடந்த ஒரே வாரத்தில் 2 கைதிகள் தப்பிய ஓடிய சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 10, 2025
திருச்சி: கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு பிரதம மந்திரியின் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவிதொகை திட்டத்தின் கீழ் உதவிதொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://umis.tn.gov.in/ என்ற தளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025
ஶ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி விழா டிச.19 தொடக்கம்

உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான விழா வரும் டிச.,19-ம் தேதி திருநெடும் தாண்டகத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.