News September 30, 2025

திருச்சி: ஆயுதபூஜை சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு இரண்டு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று (செப்.30) மாலை 4:15 மணிக்கு தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு ஒரு ரயிலும், இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வழியாக மதுரைக்கு ஒரு ரயிலும் முன்பதிவு இல்லாமல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 15, 2025

திருச்சி: நீதிமன்றத் தடையை மீறினால் கடும் நடவடிக்கை

image

திருச்சி, மலைக்கோட்டை தெப்பக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில், இன்று இரவு நீதிமன்ற அறிவிப்பாணை கொண்ட அறிவிப்பு பலகை தெப்பக்குள சுற்று வட்டார பாதைகளில் மாநகராட்சி அலுவலர்களால் வைக்கப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

News November 15, 2025

திருச்சி: பணம் பிரச்னையில் வாலிபர் அடித்து கொலை

image

மணப்பாறையை அடுத்த சீகம்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி(38). தொழிலாளியான இவர், மாயமான நிலையில், மணப்பட்டி பாலத்திற்கு கீழ் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் ஏற்பட்ட தகறாரில் கருணாநிதியை தாக்கியதில், அவர் உயிரிழந்ததாகவும், சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News November 14, 2025

திருச்சி: RELIANCE JIO INFOCOM LIMITET நிறுவனத்தில் வேலை!

image

திருச்சியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான RELIANCE JIO INFOCOM LIMITET-யில் காலியாக உள்ள JIO POINT MANAGER பணியிடம் நிரப்பப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.23,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, வரும் நவ.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!