News April 17, 2024
திருச்சி: ஆட்சியரகத்தில் இறுதி குலுக்கல்.!

திருச்சி தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் ஆகியோரின் தலைமையில், இன்று அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
Similar News
News November 8, 2025
திருச்சி: மருத்துவர் வீட்டில் 8 சவரன் நகை திருடியவர் கைது

திருச்சி, புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியை சேர்ந்தவர் பாலாஜி(30). மருத்துவரான இவரது வீட்டில் பாண்டியன்(28), என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பாலாஜி வீட்டில் 8 சவரன் நகை திருட்டு போய் உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பாண்டியன் நகையை திருடியது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் பாண்டியனை கைது செய்தனர்.
News November 8, 2025
திருச்சியில் வெளிநாட்டு வாலிபர் பலி

இலங்கையை சேர்ந்தவர் வாலிபார் லுக்சானன்(19). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சியில் உள்ள அண்ணாமலை நகரில் கார்த்திக் என்பவரை பார்க்க வந்தபோது, அங்கு மின் ஒயர் எதிர்பாராமல் மேல பட்டுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
News November 8, 2025
திருச்சி: பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், சேலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை (நவ.8) வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 97905 74437 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


