News March 19, 2024

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய காவலர்கள்

image

காட்டுப்புத்தூர், திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடிவேல்,செல்வம் ஆகிய 2 எஸ்.எஸ்.ஐ,-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன்,முதன்மை காவலர் சாந்தமூர்த்தி,காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை ஆகிய 4 காவலர்கள் என மொத்தம் 6 போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

Similar News

News March 12, 2026

திருச்சி: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திருச்சி: தமிழ் தேர்வில் 474 பேர் ஆப்சென்ட்

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் மொழி தேர்வு எழுத தனித் தேர்வர்கள் உட்பட 34,501 மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இதில் 34,027 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 474 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 12, 2026

திருச்சி: அதிரடி தீர்ப்பு – 20 ஆண்டுகள் கடுங்காவல்

image

திருச்சியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!