News May 13, 2024

திருச்சியில் FAN Park…ரெடியா மக்களே?

image

தமிழகத்தின் நெல்லை, மதுரை, கோவை போன்ற இடங்களில் ஐபிஎல் ஃபேன் பார்க் எனப்படும் நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இதனை ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர். இந்நிலையில் வருகிற 18 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் போட்டிகளின் ஐபிஎல் பேன் பார்க்கானது திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 11, 2025

திருச்சி: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

image

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக் <<>>செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

திருச்சியில் டிடிவி தினகரன் போட்டி?

image

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட கட்சியில் விருப்ப மனு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட இருப்பதற்கான விருப்ப மனுவை, மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கட்சி தலைமையிடம் நேற்று வழங்கினார்.

News December 11, 2025

திருச்சி: மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், திருச்சியில் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் மூன்று சிறந்த பள்ளிகள், சிறந்த கல்லூரிகள், சிறந்த வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளது. விருதுக்கான விண்ணப்பங்களை ஆட்சியரக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, வரும் ஜன.15க்குள் ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!