News November 22, 2024
திருச்சியில் 17 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

திருச்சி காஜாமலை மற்றும் பூலாங்குடி பகுதிகளில் நேற்று மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதயம் மளிகை மற்றும் KJN டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்தனர்.
Similar News
News November 12, 2025
திருச்சி: காணாமல் போனவர் பிணமாக மீட்பு

மணப்பாறை அடுத்த மணப்பட்டி பிரிவு அருகே இன்று காலை சீகம்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்த கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 12, 2025
திருச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருச்சி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News November 12, 2025
திருச்சி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

திருச்சி மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<


