News November 30, 2024
திருச்சியில் விமானம் ரத்து

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சிங்கப்பூர் செல்லும் விமானம் மற்றும் தமிழகம் வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, மங்களூர் பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News November 10, 2025
திருச்சியில் காலை கொலை; நண்பகல் குற்றவாளிகள் கைது

திருச்சி, பீமநகர் மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட மோதலால் தாமரைச்செல்வன் என்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ், பிரபாகரன், நந்து, கணேசன் உள்ளிட்டோரை சில மணி நேரங்களில் திருச்சி மாநகர போலீசார் அதிரடியாக விரட்டிச் சென்று கைது செய்தனர்.
News November 10, 2025
திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடம் மாற்றம்

திருச்சி – அகமதாபாத் சிறப்பு ரயில் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சியில் இருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகமதாபாத்துக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான எழும்பூர், தாம்பரம் வழியை தவிர்த்து ரேணிகுண்டா, திருத்தணி வழியாக இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
திருச்சி மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

திருச்சி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <


