News March 23, 2024
திருச்சியில் மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

திருச்சியில் கடந்த 17.2.2024ம் தேதி 23 1/2பவுன் தங்க நகைகள் திருடிய வழக்கில் சூசை ராஜ், ஷேக் தாவூத், யாசர் அராபத் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மூவரின் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் 15 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்ததால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று இரவு உத்தரவிட்டார்.
Similar News
News November 8, 2025
திருச்சி: 8-ஆம் வகுப்பு போதும், அரசு வேலை ரெடி!

தமிழக நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து தெரிந்து கொள்ள <
News November 8, 2025
திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News November 8, 2025
திருச்சி: முன்னாள் வட்டாட்சியரை கொலை – 3 பேர் கைது

திருச்சி தாயனூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக முன்னாள் வட்டாட்சியர் சுப்பிரமணி என்பவர், நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மூன்று பேர் தலைமறைவாகினர். இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் பதுங்கி இருந்த அசோக்குமார், தமிழரசன் மற்றும் சூர்யா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


