News November 21, 2024

திருச்சியில் முதல்வர் திறந்து வைப்பார்: அமைச்சர்

image

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை ஆவடி மாநகராட்சியை தொடர்ந்து, திருச்சியிலும் மீட்டர் மூலம் 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் வழங்கப்பட உள்ளது. திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மணப்பாறை சிப்காட் தொழிற்சாலை போன்ற அனைத்து திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.

Similar News

News November 14, 2025

திருச்சி: B.E போதும்.. இஸ்ரோவில் வேலை ரெடி!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 14, 2025

திருச்சி: தாட்கோ சார்பில் பயிற்சிகள் அறிவிப்பு

image

தாட்கோ சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, சர்வதேச விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை பயிற்சி, பயணச்சீட்டு முன்பதிவு அடிப்படை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.18 முதல் 23 வயது நிரம்பிய, +2 அல்லது பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

திருச்சி: ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

image

திருச்சி, கொட்டப்பட்டு கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் நவ,27ம் தேதி ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் மற்றும் 28ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. கட்டணத்துடன் கூடிய இந்த பயிற்சி முகாமில் ஆடு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்த விபரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!