News November 29, 2024
திருச்சியில் பல கோடிகளை ஏமாற்றிய 2 பேர் கைது

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் போலி நிறுவனம் நடத்தி அதன் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் பத்மா மற்றும் கணேசன் என்ற இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டவர்களையே மிரட்டி, ஆதாரங்களை அழித்த மேற்கண்ட இரு வரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News November 9, 2025
திருச்சி மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தில் பயன்பெற, விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகள், எவ்வித விடுபாடின்றி பயன்பெறும் வகையில் விரைவாக தனித்துவ அடையாள எண் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.
News November 9, 2025
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
திருச்சி: தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அறிவிப்பு

இந்திய அரசின் என்.எஸ்.டி.சி சார்பில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, திருச்சி மத்வ சித்தாந்த சபா பயிற்சி நிலையத்தில், வரும் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


