News August 6, 2024
திருச்சியில் நாளை புகழ்பெற்ற தேரோட்ட விழா

திருப்பைஞ்சீலியில் உள்ள நீலிவனநாதர் கோவிலின் ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் தேரோடும் வீதிகளில் போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற கோவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் கடைகளின் உரிமையாளர்களை அழைத்து உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்கள்.
Similar News
News January 21, 2026
திருச்சி: கடன் தொல்லை நீங்க வேண்டுமா?

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும் ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது வயலூரின் தனிச் சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 21, 2026
காரில் கடத்திவரப்பட்ட கள்ள நோட்டுகள் பறிமுதல்

திருவெறும்பூர் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.8,37,800 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பாபாரோ (54) மற்றும் நாராயணராம் (34) ஆகிய இருவரையும் பிடித்து துவாக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
திருச்சி: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <


