News August 19, 2024

திருச்சியில் நாளை உடற்தகுதி தேர்வு

image

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நாளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று அறிவித்துள்ளார். இதில் 998 தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு நாட்கள் இந்த தகுதி தேர்வு நடைபெற உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Similar News

News January 21, 2026

திருச்சி: தொழிற்பள்ளி அங்கீகாரம் – கலெக்டர் அறிவிப்பு

image

2026-27ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் பிப்.28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

திருச்சி: விபத்தில் கார் ஓட்டுநர் மூச்சுத் திணறி பலி

image

வளநாடு அடுத்த புதுக்குடியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் தனது மனைவியுடன் நேற்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சொரியம்பட்டி அருகே இ-பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த கார் மோதி காயமடைந்தனர். இந்நிலையில் கார் ஓட்டுநர் கஸ்தூரிராஜ் என்ப்வருக்கு திடீரென அதிர்ச்சியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News January 21, 2026

திருச்சி: இன்று மின்தடை இல்லை – அறிவிப்பு வாபஸ்

image

தொட்டியம் பகுதியில் இன்று (ஜன.21) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணமாக, மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் கிடையாது என்றும், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!