News November 25, 2025

திருச்சியில் கோர விபத்து

image

திருச்சி வரகனேரியை சேர்ந்த ஷேக் அப்துல்லா, நிகேஷ் ஆகியோர் டூவீலரில் நேற்று தென்னூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் டூவீலரில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய காட்டூரைச் சேர்ந்த முகமது ஆசிக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 16, 2026

திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 16, 2026

திருச்சி: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் <>www.onlineppa.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 16, 2026

திருச்சி: சோஷியல் மீடியா பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? <>www.cybercrime.gov.in <<>>என்ற இணையதளத்தில் ‘Register a Complaint’ என்ற பிரிவில் சென்று சம்பவம் தொடர்பான விவரங்களை அளித்து ஆன்லைன் வழியே எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். மறக்காமல் இதை SHARE செய்யவும்!

error: Content is protected !!