News January 14, 2026

திராவிட பொங்கல் Vs இந்துக்களின் விழா!

image

பொங்கல் பண்டிகையை ‘திராவிட பொங்கலாக’ கொண்டாட ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக, பொங்கல் ‘இந்துக்களின் விழா’ என்றும், பொங்கலில் உள்ள இந்து அடையாளங்களை நீக்க திமுக சதி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியது. அதிமுகவும், ‘அரசியல் நாடகம்’ என விமர்சித்த நிலையில், ஸ்டாலினின் அழைப்பு கட்சி தொண்டர்களுக்கானது; பொதுமக்களுக்கானது அல்ல என்று திமுக விளக்கமளித்துள்ளது.

Similar News

News February 16, 2026

கர்ப்பிணிகள் கவனத்திற்கு.. நாளை சூரிய கிரகணம்

image

சூரிய கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் எச்சரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கிரகண நேரத்தில் அவர்கள் வெளியே செல்லக்கூடாது, சென்றால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவார்கள். ஆனால், பாதிப்பு ஏற்படும் என்பதற்கு இதுவரை எந்த அறிவியல் சான்றும் இல்லை. இருப்பினும், வெப்ப அலைகள் மற்றும் சுற்றுச்சூழல்களில் மாற்றம் இருக்கலாம் என்பதால் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News February 16, 2026

தேர்தல் 2026.. விஜய்யின் அடுத்தக்கட்ட நகர்வு

image

புதுச்சேரிக்கு புதிய நிர்வாகக் குழுவை அமைத்து விஜய் உத்தரவிட்டுள்ளார். தனது வழிகாட்டுதலின்படி Ex MLA-க்கள் சாமிநாதன், அசனா, பெரியசாமி அடங்கிய 30 பேர் கொண்ட குழு புதுச்சேரியில் தவெகவின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் என விஜய் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 30 தொகுதிகள் உள்ள நிலையில், இந்த 30 பேர் தான் TVK வேட்பாளர்களோ என்ற சந்தேகத்தை அரசியல் விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.

News February 16, 2026

ஆணுறுப்பை விற்பனை செய்த இளைஞர்.. எதற்கு தெரியுமா?

image

தலைப்பை பார்த்ததும் விசித்திரமாக தோன்றுகிறதல்லவா? தாய்லாந்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்ததாக செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. தனது விலை உயர்ந்த காரில் மாற்றம் செய்வதற்காக, இளைஞர் ஒருவர் தனது விதைப்பையை (ஆணுறுப்பின் கீழ் பகுதி) ₹24.5 கோடி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்ன இருந்தாலும், இதெல்லாம் ரொம்ப ஓவர் பாஸ்!

error: Content is protected !!