News November 15, 2025
திராவிட நெருப்பு டெல்லி வரை எரிகிறது: உதயநிதி

புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை என்று விஜய்யை, மறைமுகமாக உதயநிதி விமர்சித்துள்ளார். திமுக தொண்டர்களுக்கு வரலாறு உள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். திராவிட நெருப்புதான் டெல்லி வரை எரிகிறது என்ற உதயநிதி, டெல்லியில் திமுக தான் எதிர்க்கட்சி என்பதால், SIR மூலம் பாஜக, தமிழகத்தை ஒடுக்க பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 11, 2025
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், 2026 தேர்தல் பணிகள், கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள், விஜய்யின் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் உள்ளிட்டோர் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News December 11, 2025
பாரதி கவிதைகள் துணிவை தூண்டின: PM

பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி, PM மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதியின் கவிதைகள் துணிவை தூண்டியதாக குறிப்பிட்ட அவர், அவரது சிந்தனைகள் மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலை கொண்டிருந்ததாக தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சார, தேசிய உணர்வை பாரதி ஒளிர செய்ததாகவும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க பாடுபட்டதாகவும் PM குறிப்பிட்டார்.
News December 11, 2025
சற்றுமுன்: விலை மொத்தம் ₹10,000 உயர்ந்தது

வெள்ளி விலை இதுவரை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹209-க்கும், கிலோ வெள்ளி ₹2,000 உயர்ந்து ₹2,09,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹8,000, இன்று ₹2,000 என 2 நாளில் மொத்தம் ₹10,000 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்ந்து காணப்படுவதால், வரும் நாள்களில் நம்மூரிலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


