News June 17, 2024
தியாகத்திருநாள் சிறக்கட்டும் – கமல்ஹாசன்

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் இன்று(ஜூன் 17) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக , உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக , உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக தியாகத்திருநாள் சிறக்கட்டும் ” என ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News January 18, 2026
சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.19) ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. அதன்படி வியாசர்பாடி, செட்டிமேடு, காத்தகோழி, சங்கீதா நகர், ஜெயராஜ் நகர், பாய் நகர், மகாவீர் எஸ்டேட், குமார் ராஜன் நகர், திருப்பதி நகர், ராதாகிருஷ்ணன் நகர், கே.வி.டி., தனலட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், சந்தோஷ் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் ஆகும்.
News January 18, 2026
சென்னையில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

சென்னை மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <
News January 18, 2026
சென்னை: சாலை விபத்தில் ஒருவர் பலி!

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ், நேற்று இரவு இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், டூவீலர் ஓட்டி வந்தவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


