News August 5, 2024

திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் அழைப்பு

image

முன்னாள் முதல்வர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வாடிப்பட்டியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அமைதி பேரணி நடைபெற உள்ளது. பேரணி முடிவில் பேருந்து நிலையத்தின் முன்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் மூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 17, 2026

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (16.01.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News January 16, 2026

BREAKING: பாலமேடு ஜல்லிக்கட்டு வெற்றி வீரர் இவர் தான்!

image

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. தற்போது முதல் பரிசுக்கு அஜித் தேர்ந்தெடுக்கப்பட்டு காரினை வென்றுள்ளார். பிரபாகரன் 2ம் பரிசு பைக்கினை வென்றுள்ளார்.

News January 16, 2026

BREAKING: சூப்பர் ஓவர் போல முடிந்த பாலமேடு ஜல்லிக்கட்டு

image

உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது. 1000 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட இந்த போட்டியில் இறுதியாக அஜித் மற்றும் பிரபாகரன் ஆகிய இருவரும் தலா 16 மாடுகள் பிடித்த நிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர் யார் என்ற பதற்றம் தற்போது அதீத தீவிரமாக பரவி வருகிறது.

error: Content is protected !!