News June 18, 2024

திமுக சார்பில் நன்றி தெரிவிப்பு கூட்டம்!

image

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தமைக்காக அரூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் நாளை மறுதினம் (ஜூன் 20) வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடக்கவிருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News January 18, 2026

தருமபுரியை உலுக்கிய பெரும் துயரம்!

image

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே சுங்கரஅள்ளியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (48), தீராத வயிற்று வலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றும் வலி குறையாததால், கடந்த 13-ம் தேதி விபரீத முடிவெடுத்தார். தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி உயிரிழந்தார். இதனை, கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 18, 2026

தருமபுரி: அரூரில் விதி மீறியதால் அதிரடி வேட்டை!

image

தருமபுரி மாவட்டம் அரூரில், திருவள்ளுவர் தின மதுவிலக்கு உத்தரவை மீறி எப்.எல்-2 கிளப் பாரில் மது விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில், விதிகளை மீறிச் செயல்பட்ட அந்த பார் குறித்து அரூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News January 18, 2026

தருமபுரியில் பரபரப்பு – 10 பேருக்கு பாய்ந்த வழக்கு

image

தருமபுரி மாவட்டம், வேப்பமரத்தூர் பொங்கல் திருவிழாவில் பொம்மிடி-தொப்பூர் சாலையில் நடன நிகழ்ச்சி நடந்தது. அப்போது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அவ்வழியே பைக்கில் வந்த அழகேசன்(50) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரு தரப்பின் புகார் படி10 பேர் மீது பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

error: Content is protected !!