News August 5, 2024

திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

image

புதுவை சட்டசபை இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே, புதுச்சேரிக்கு பிரதமர் மோடி கூறிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை, அதேபோல் மாநில அந்தஸ்து பெறவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் பேரவையில் பேசினார். மேலும் பாஜக தலைவரை போல சபாநாயகர் செயல்படுவதாக கூறி திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Similar News

News January 20, 2026

3 மாத்திரைக்கு தடை விதித்த புதுவை அரசு

image

புதுச்சேரியில், 3 மாத்திரைகள் குறிப்பிட்ட தரத்தில் இல்லாத நிலையில், அவற்றை விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. புதுவை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் அனந்தகிருஷ்ணன், இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். மேலும் மாத்திரைகளை மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது எனவும், மருந்து கடைகளில் உள்ள இருப்புகளின் நிலவரத்தை மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்குத் தெரிவிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 20, 2026

இந்திய தூதருக்கு புதுவை முதல்வா் கடிதம்

image

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே பகுதியைச் சோ்ந்த, கப்பல் பொறியாளா் ஈரானில் மாயமானது குறித்து கண்டறிய வலியுறுத்தி, ஈரானுக்கான இந்திய தூதா் ருத்ரா கௌரவ் ஸ்ரேஸ்த்துக்கு, புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளாா். விரைவில் ஈரானில் அவரை கண்டறிந்து, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று முதல்வா் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

News January 20, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

error: Content is protected !!