News April 12, 2024
திண்டுக்கல்: ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

திண்டுக்கல் ஆர்.எஸ்.ரோடு பகுதியில் வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணம் கொண்டுவர பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தங்கத்திற்கான உரிய ஆவணம் உள்ளதா? என வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
திண்டுக்கல் மக்களே நம்பாதீங்க! எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, மக்களுக்கு சைபர் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “நீங்கள் ஒரு பரிசு வென்றீர்கள்” (You won a prize) அல்லது பரிசு பொருட்கள் கிடைத்ததாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம். இது போன்ற குறுஞ்செய்திகள் மூலம் போலியாக நடத்தப்படும் சைபர் மோசடி ஆகும். இத்தகைய மோசடிகள் குறித்து புகார் அளிக்க 1930 அல்லது www.cybercrime.gov.in அணுகலாம்.
News November 12, 2025
திண்டுக்கல் இன்றைய முக்கிய செய்திகள்

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் முகவர் கூட்டம்.
திண்டுக்கல் மாநகராட்சி: “முதல்வர் படைப்பகம்” பூமி பூஜை.
நத்தம்: கைலாசநாதர் கோவிலில் கால பைரவர் பூஜை.
நத்தம்: ரெட்டியபட்டியில் வாக்காளர் பட்டியல் பயிற்சி.
நத்தம்: பால் வேன் ஓட்டுநர் விபத்தில் உயிரிழப்பு.
சிறுமலை: புதிய சாலை பூமி பூஜை, தார் சாலை பணிக்கு அமைச்சர் எம்.எல்.ஏக்கு நன்றி தெரிவிப்பு.
News November 12, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (நவம்பர் 12) இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


