News October 1, 2025
திண்டுக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இன்று(அக்.1) வெளியிட்ட செய்தியில், ’தென்னக ரயில்வே ஏற்கனவே அறிவித்த ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம் இன்று தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கியுள்ள 15 நிமிடத்திற்குள் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (IRCTC) கணக்குகளைக் கொண்ட பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் ஆதார் கணக்குகள் இல்லாதவர்கள் முன்பதிவு செய்ய இயலாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
கொடைக்கானல் அருகே பஸ் மோதி இளைஞர் பலி

ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்ற போது, வத்தலக்குண்டுவிலிருந்து வந்த தனியார் பஸ்ஸை முந்த முயற்சித்த போது பஸ்சின் முன்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 14, 2025
திண்டுக்கல் காவல்துறை முக்கிய அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை, சமூக தளம், குறுஞ்செய்தி, வேலைவாய்ப்பு லிங்குகள், டேட்டா என்ட்ரி போன்ற அழைப்புகள் மற்றும் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை மோசடி முயற்சிகள் ஆகும். பணம் இழப்பதைத் தவிர்க்க, சந்தேகமான அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் மற்றும் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறது.
News December 14, 2025
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

திண்டுக்கல் மக்களே,தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள்,வரும் டிச.31ம் தேதிக்குள் <


