News May 5, 2024

திண்டுக்கல்: ரயில் நிலையத்தில் 117 கேமராக்கள்

image

திண்டுக்கல் ரயில் நிலையங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையத்தில் பாதுகாப்பிற்காக 33 கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையத்தில்  கூடுதல் பாதுகாப்பிற்காக கூடுதலாக கேமராக்கள் பொருத்த தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. அதன்படி இன்று (5.5.2024) முதல் கூடுதலாக 117 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

Similar News

News November 12, 2025

திண்டுக்கல் மாவட்டத்தின் இரவு ரோந்து காவலர்கள் விபரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நவம்பர் 11 இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனியை, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,

News November 12, 2025

திண்டுக்கல்லில் தலைப்புச் செய்திகள்

image

1.பழனி தாலுகா காவல் நிலையம்: பாஸ்கரன் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.
2. திண்டுக்கல் மருத்துவமனை: அரசு மருத்துவர்கள் சங்கம் தர்ணா.
3. பழனி நூற்றாண்டுவிழா: கல்வி, உணவு வழங்கல் அமைச்சர்கள் பங்கேற்பு.
4. மாற்றுத்திறனாளிகள்: மாதாந்திர உதவி தொகை உயர்த்த கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்.
5. ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பயிற்சி வகுப்பு ஆட்சியர் சரவணன் துவக்கம்.

News November 11, 2025

சிறுமலையில் மரத்திலிருந்து விழுந்து வாலிபர் உயிரிழப்பு!

image

திண்டுக்கல் சிறுமலை பழையூரைச் சேர்ந்த சுரேஷ் (28) அப்பகுதி தோட்டத்தில் சவுக்கு மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்தார். தலைக்கு ஏற்பட்ட கடும் காயம் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!