News March 28, 2024

திண்டுக்கல் பணி நிறைவு பாராட்டு விழா

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து 31.03.2024 தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் தெற்கு போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் D.சேரலாதன், சின்னாளப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் C.மைக்கேல் டேவிட், கள்ளிமந்தயம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் G.குமாரபாண்டியன் , உட்பட மாவட்ட காவல் எஸ்.பி பிரதீப், நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Similar News

News January 21, 2026

அறிவித்தார் திண்டுக்கல் ஆட்சியர்!

image

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்கிறது. விண்ணப்பங்கள் 01.01.2026–25.01.2026 வரை https://tanfinet.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது. தேர்வில் OFC/ONT பராமரிப்பு, தடையில்லா இணைய சேவை, SLA பின்பற்றுதல் போன்ற பணிகள் அடங்கும். விவரங்களுக்கு 044-24965595. மாவட்ட ஆட்சியர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

திண்டுக்கல் அருகே அதிரடி கைது!

image

திண்டுக்கல், வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர், கொத்துவா பள்ளிவாசல் அருகே, சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று சுற்றிவளைத்த போலீசார், இருவரை கைது செய்தனர். மேலும் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததோடு, தப்பியோடிய சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

News January 20, 2026

திண்டுக்கல்: இனி அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<> இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!