News October 19, 2025

திண்டுக்கல்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 12, 2025

திண்டுக்கல்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News December 12, 2025

திண்டுக்கல்: டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?

image

திண்டுக்கல் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <>கிளிக் <<>>செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 12, 2025

பொங்கலுக்கு ரூ.5000..! திண்டுக்கல் அமைச்சர் கொடுத்த UPDATE

image

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைத்திருநாளில் ரூ.5000 வழங்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதைக் கேட்டபோது, “முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்; மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார்,” என தெரிவித்தார்.

error: Content is protected !!