News August 23, 2025

திண்டுக்கல்: தகாத உறவால் கணவன் தற்கொலை!

image

திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள தனியார் பங்களாவில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் ஜான்சன் பாபு(36). இவருக்கும் சசிரேகா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சசிரேகாவிற்கும் மற்றொரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனால் இந்தத் தம்பதி விவகாரத்திற்கு மனு செய்த நிலையில் நேற்று முந்தினர் ஜான்சன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News January 18, 2026

திண்டுக்கல்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். திண்டுக்கல் மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்

News January 18, 2026

23 கோடிக்கும் அதிகமான முறை பெண்கள் இலவச பயணம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்படும் 201 அரசு டவுன் பஸ்கள் மூலம் பெண்கள் இதுவரை 23 கோடியே 95 லட்சத்து 394 முறை கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். பழனி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களை இணைக்கும் இந்தச் சேவை, பெண்களின் அன்றாடப் பயணச் சுமையைக் குறைத்துள்ளது. அதே வேளையில் பேருந்துகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News January 18, 2026

திண்டுக்கல்: அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியம்

image

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக கலை–இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளராக இருந்த S.K.K.ஹக்கீம், அக்கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!