News November 14, 2025
திண்டுக்கல்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News December 7, 2025
திண்டுக்கல்: இரவு நேரா ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச. 7) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
News December 7, 2025
திண்டுக்கல்: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

திண்டுக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 7, 2025
திண்டுக்கல்: மீன்பிடி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் 25.11.2025 முதல் 10.12.2025 வரை, முற்பகல் 9 மணி வரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in இணையதளத்தில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


