News November 22, 2024
திண்டுக்கல்: காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி

திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்த S.விக்னேஷ்குமார், கடந்த மே.11ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்த 2017 பேட்ச் காவலர்கள் ஒன்றிணைந்து ரூ.21,69,900 லட்சம் நிதி திரட்டினர். இந்த நிதிக்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் முன்னிலையில், விக்னேஷ் குடும்பத்தினரிடம் இன்று வழங்கப்பட்டது.
Similar News
News November 10, 2025
திண்டுக்கலில் பைக் திருட்டு; 3 சிறுவர்கள் கைது

திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனங்கள் தொடர்ச்சியாக திருடப்பட்ட வழக்குகளை டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீசார் விசாரித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் தடயங்களை பின்தொடர்ந்தனர். விசாரணையில் திண்டுக்கல் மற்றும் வத்தலக்குண்டு பகுதிகளைச் சேர்ந்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 9 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நடவடிக்கையை எஸ்பி பிரதீப் பாராட்டினார்.
News November 9, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம் இன்று நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News November 9, 2025
திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் விமான நிலையத்தில் வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் இங்கு <


