News November 19, 2025

திண்டுக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

திண்டுக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம்,<> eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க மக்களே!

Similar News

News January 17, 2026

சின்னாளப்பட்டியில் ரயில் விபத்து – ஒருவர் பலி

image

சின்னாளப்பட்டி முருகன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் சரக்கு ரயில் உரசியதில் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 17, 2026

திண்டுக்கல்: வீட்டில் ஹீட்டர் தீ விபத்து !

image

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பாப்பாத்தி வீட்டில் விக்னேஷ் தம்பதியர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், இரவு 7 மணியளவில் குளியலறை ஹீட்டரில் அதிக மின்சாரம் காரணமாக தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தகவலால் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.வாஷிங் மெஷின் உள்ளிட்ட சில வீட்டு உபகரணங்கள் எரிந்து நாசமாகின.

News January 16, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!