News October 5, 2025
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனை: 5 பேர் கைது

திண்டுக்கல் எஸ்.பி.யின் உத்தரவின் பேரில், புறநகர் டி.எஸ்.பி. சங்கர் மேற்பார்வையில், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார், பொன்னிமாந்துறை ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முகமது அலி ஜின்னா, ரஞ்சித்குமார், சரவணகுமார், ஜெயத்ரட்சகன், ரஜித் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கஞ்சா, விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News December 9, 2025
திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், புதுப்பட்டி அருகே முத்துராம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீசன் (22). கூலித்தொழிலாளியான இவர், பைக்கில் ஹெல்மெட் அணியாமல், திண்டுக்கல்- பழனி சாலையில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
News December 9, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.8) இரவு 10 மணி முதல் இன்று (டிச.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.