News August 6, 2024
திண்டுக்கல்லில் பசுக்களுக்கு தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு மேல் வயதுடைய அனைத்து பசுக்களுக்கும் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்படுகிறது. எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போர்களும், தங்களது பசுக்களுக்கு தவறாமல் இத்தடுப்பூசியினை செலுத்தி, கால்நடைகளை நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 16, 2026
திண்டுக்கல்லில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
News January 16, 2026
கொடைக்கானலில் தண்ணீர் டீசலா? உஷார் மக்களே

கொடைக்கானல்: பண்ணைக்காடு பேரூராட்சி ஊத்து பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிய சிறிது நேரத்திலேயே வாகனங்கள் பழுதாகி நின்றன. மெக்கானிக் மூலம் பரிசோதித்தபோது, டீசலில் அதிகளவு தண்ணீர் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. அடிக்கடி இதுபோன்று வாகனங்கள் பழுதாகி நிற்பதால், பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிப்பதோடு, உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News January 16, 2026
நத்தம் கிரகணத்தால் மாறிய தேதி!

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழா தேதி சந்திரகிரகணம் முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி பிப்ரவரி 23-ம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றமும், 24-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா மார்ச் 10-ம் தேதியும் மறுநாள் 11-ம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும்.


