News October 1, 2025
திண்டுக்கல்லில் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: அய்யலூர் அருகே பேசும் பழனியாண்டவர் கோயில் எதிர்புறம் திண்டுக்கல் – திருச்சி தேசிய நான்கு வழி சாலையைக் கடக்க முயன்ற தீர்த்தாக்கிழவனூரைச் சேர்ந்த ஆறுமுகம் மவினை பாப்பாத்தி(50) என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 14, 2025
திண்டுக்கல் அருகே நாசம் செய்த காட்டு யானைகள்!

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே காட்டு யானைகள் அடிக்கடி மலையடி வர தோட்டங்களுக்குள் புகுந்து விடுகிறது. அதன்படி கன்னிவாடி அருகே முத்துப்பாண்டி என்பவரின் தோட்டத்தில் புகுந்தயானைகள் அங்கு பயிரிட்டு இருந்த வாழை மரங்களை மிதித்து உடைத்து நாசம் செய்தது.வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனப் பணியாளர்கள் அங்கு வந்து சேதமானமரங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
News December 14, 2025
கொடைக்கானல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்குச் சென்றார். வத்தலக்குண்டு அருகே தனியார் பேருந்தை அவர் முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 14, 2025
பழனி அருகே நேபாள பெண் விபரீதம் முடிவு!

திண்டுக்கல்: நேபாளம் நாட்டை சேர்ந்த சங்கர் சுணார் (வயது 25). இவர் தனது மனைவி ஜனப் பரியாருடன் (18) பழனி அருகே ஆண்டிப்பட்டியில் தனியார் கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்தார். ஜனப்பரியார் அடிக்கடி செல்போன் பார்த்ததைசுணார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜனப் பரியார் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெய்காரப்பட்டி போலீசார் விசாரணை!


