News April 9, 2024

திடீர் தீ விபத்து பற்றி எரிந்த காடு

image

அரியலூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆறு மதனத்தூர் பாலத்தின் மேல் புறத்தில் அமைந்துள்ள ஆர்எஸ் பதின் மரம் காடு உள்ளது. இந்த இடத்தில் நேற்று (ஏப்.8) திடீரென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது.  இந்த சம்பவம் கடுமையான வெப்பத்தினால் ஏற்பட்டதா அல்லது யாரேனும் மர்ம நபர்களின் வேலையா என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. 

Similar News

News December 10, 2025

அரியலூர்: 69 பேர் மீது வழக்கு பதிவு

image

அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் சாஸ்திரி உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் மது அருந்திய 41 பேர், மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக 14 பேர், சட்டவிரோதமாக மது விற்றதாக 7 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News December 10, 2025

அரியலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

image

1. முதலில், <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்ங்க.

News December 10, 2025

அரியலூர்: சட்ட விரோத மது விற்பனை-ஒருவர் கைது

image

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் நக்கம்பாடி பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் இருவரும், அரசு மதுபான பாட்டில்களை வீட்டின் பின்புறம், சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சோதனையில் 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!