News August 22, 2025

திடீரென ஸ்தம்பித்த GST சாலை

image

சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

Similar News

News January 25, 2026

சென்னை: 11 வயது சிறுமியிடம் அத்துமீறல்!

image

சென்னை பெரம்பூரில் மளிகைக் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் (48) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருவிள்ளிக்கேணி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். கைதான ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News January 25, 2026

சென்னை: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

News January 25, 2026

சென்னை: திருடிய வண்டியிலேயே தொழில் செய்த நபர்!

image

சென்னை ஓட்டேரி மங்களபுரம் பகுதியில் மகேஸ்வரன் ஆட்டோவை திருடிய பிரேம்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். தி.நகர் பகுதியில் வாகன சோதனையின்போது பிடிபட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு வாரமாக திருட்டு ஆட்டோவில் சவாரி ஓட்டி, அதில் கிடைத்த வருமானத்தில் மது குடித்துவிட்டு ஆட்டோவிலேயே தூங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!